“//மனிதர்கள் ஒருவரோடு
ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவான அம்சங்களை அடைகிறார்கள். அதாவது
சமூகமானது மனிதர்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாக இருக்கிறது.//
//ஒரே மாதிரியான திருவிழாக்கள், அவற்றை இணையாகக்
கொண்டாடும் பல்வேறான சாதிகளை ஒன்றுபட்ட ஒரே சமூகமாக இணைத்துவிடுவதில்லை. அப்படி இணைக்கப்பட
வேண்டுமானால் அவர்கள் பொதுவான நடவடிக்கையில் பங்கு பெறுவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம்.//
//கூட்டு நடவடிக்கைகளில் தனிமனிதனை – பங்கு பெறவும்
பகிர்ந்து கொள்ளவும் செய்யும் போதுதான் – அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன்
வெற்றியாகவும், தோல்வியை தன் தோல்வியாகவும் அவன் உணர்வான். இது உண்மையில் மனிதர்களை
ஒன்றிணைத்து ஒரே சமூகமாக ஆக்கும் விசயம் ஆகும்.//”