வெள்ளி, 11 நவம்பர், 2016

அம்மா (அப்பாவுக்கு முன்னும் பின்னும்)

நவம்பர் 12, அப்பா இறந்த தினம். இந்த நாள் வருகிறபோதெல்லாம், அப்பாவின் மரணத் தருவாய் நினைவுகளில் வருவதைப் போலவே அம்மாவைக் குறித்தும் பல நினைவுகள் வந்து நிற்கிறது. அம்மா ஒரு கடவுள் பைத்தியம். ஒரு காலத்தில் நானும் கூட கடவுள் பைத்தியம்தான். ஆனால் அம்மா அளவிற்கு இருக்க முடியாது. செவ்வாய், வெள்ளி மறக்காமல் கோயிலுக்கு போய்விடுவார். ஏதாவது அரசு விடுமுறை தினங்களோ, பள்ளி பரிட்சை விடுமுறை தினங்களோ செவ்வாய் வெள்ளி கிழமைகளாக இருந்தால், மாரியம்மன் கோயில் பத்திரகாளியம்மன் கோயில், சமயங்களில் குமரன் கோயில், மீனாட்சியம்மன் கோயில் என ஊருக்குள் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் அழைத்து சென்றுவிடுவார். வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து (மதியம் மட்டும் ஒரு வேளை உணவு உண்டு) கோயிலுக்கு செல்வார். எலுமிச்சை பழம், பஞ்சு திரி, நெய், சின்ன சின்ன மண் அகல் விளக்குகள் என அவருடைய கோயில் பை திருநீரும் குங்குமமும் மணந்தபடி இருக்கும். கோயில்களில் எலுமிச்சை பழத்தை வீணாக்கி, அதாவது எலுமிச்சை பழத்தை அம்மன் சிலைக்கு முன் பிளிந்து அந்த சிட்ரிக் அமிலத்தை தரையில் வட்டமாக ஈரப்படுத்தி, அதன் மேல் சின்ன கோலமிட்டு, பிளிந்த எலுமிச்சையின் தோல் பகுதியை பிரட்டிவிட்டு அதில் நெய் ஊற்றி, திரி வைத்து விளக்கு ஏற்றுவார். யாராவது புஷ்..புஷ்… என சப்தமிட்டு சாமியாட துவங்கிவிட்டால், அவர்களிடம் குறி கேட்க துவங்கிவிடுவார்.

சனி, 5 நவம்பர், 2016

குமரி நிலநீட்சி நூலும் சில தெளிவுகளும்

           ஆய்வு நூட்களை வாசிக்க இப்போதெல்லாம் ஆர்வமாக உள்ளது. வரலாற்று / பண்பாட்டு ஆய்வுகள் என்றால் கூடுதல் ஆர்வம் ஒட்டிக்கொள்கிறது. ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வு நூட்களே இப்படியான ஆர்வத்தை எனக்குள் தூண்டியிருக்கிறது. பண்பாட்டு, மொழி ஆய்வு கடந்து இன்னும் முன் சென்று கடல், நிலம், மனிதகுலம் போன்றவற்றின் வரலாற்று ஆய்வுகளை வாசித்து அறிகிற வாய்ப்பு எழுத்தாளர் சு.கி.ஜெயகரன் அவர்களது “குமரி நிலநீட்சி” நூல் மூலமாகக் கிட்டியது. குமரிக்கண்டம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாசிக்கத் துவங்கினேன். எஸ்.வி.ராஜதுரை ஐயா அவர்களது முன்னுரையை வாசிக்கும் போதே, ‘இந்நூல் குமரிக்கண்டம் குறித்தான எனது பார்வையை மாற்றியமைத்துவிடுமோ!’ என அஞ்சி வாசிப்பை தவிர்த்துவிடுகிற என்கிற எண்ணம் கூட வந்துவிட்டது. நூலாசிரியர் தனது அறிமுக உரையில்

“தமிழின் தொன்மையை கற்காலத்திற்கும் முற்பட்ட காலத்திற்கும் தள்ளுவது ஏற்புடையதன்று. காலக்கணிப்பை மிகைப்படுத்துவதால் தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. வரலாற்று ஆய்வு எனும் ஒளிபுகாத காலத்திற்குத் தமிழனின் தொன்மையை கொண்டு செல்வதனாலேயே தமிழினம் பெருமையடையுமா? தொன்மையை மிகைப்படுத்துவதால், தமிழருக்கு பெருமை சேர்க்கும் பரிமாணங்கள் பற்றிய நம்பகத்தன்மை குறைந்துவிட வாய்ப்புகளுண்டு.”

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சாராய குடிக்கி புள்ளையாரு

“சாராயத்த ஊத்தி கருப்பனுக்கு வையிங்கடான, எழவெடுத்த மவனுக நேத்து வந்த புள்ளயாருக்கு வச்சிருக்கானுக!! அவென் குடிச்ச எச்சைய குடிக்க எங் கருப்பென் என்ன தொன்னாந்து போயா நிக்கிறான்!!??”

குலதெய்வம் கும்புட ஆரம்பிக்கிறப்பலாம் இந்த கன்னியப்பென் தண்ணிய போட்டுட்டு ஏதாவது ஏழரைய இழுக்க ஆரம்பிச்சிடுறான்

“ஏழேய்!! நான்தான் சொல்லீட்டேன்லடா.. தெரியாம அங்க வச்சிட்டாங்கனு. கருப்பனுக்கு வேற சரக்கு வாங்கி ஊத்தி வச்சிடுவோம்டா கன்னியப்பா.. பிரச்சனை பண்ணாம வீட்டுக்கு போடா. யோவ்.. கொஞ்சமாவது வெவரம் வேணாமாயா.. எத எங்க படைக்கிறதுனு!?”

பூசாரி கொஞ்சம் பக்குவமா சொன்னதும், அப்போதைக்கு அமைதியாகிட்டான். இல்லனா இனியாரம் யாரும் பதில் பேச முடியாத அளவுக்கு கேள்வியும் வசவுமா தூள் பறக்கும். கோயில் மேட்டுல நின்னுக்கிட்டு இருந்த கூட்டம் முழுக்க கன்னியப்பன் அடுத்து என்ன பண்ண போறயான்னு பாத்துகிட்டே நின்னுச்சி.

வெள்ளி, 8 ஜூலை, 2016

மண்ணுக்கடியில் மாநகரம்

           “//மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவான அம்சங்களை அடைகிறார்கள். அதாவது சமூகமானது மனிதர்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாக இருக்கிறது.//
//ஒரே மாதிரியான திருவிழாக்கள், அவற்றை இணையாகக் கொண்டாடும் பல்வேறான சாதிகளை ஒன்றுபட்ட ஒரே சமூகமாக இணைத்துவிடுவதில்லை. அப்படி இணைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் பொதுவான நடவடிக்கையில் பங்கு பெறுவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம்.//
//கூட்டு நடவடிக்கைகளில் தனிமனிதனை – பங்கு பெறவும் பகிர்ந்து கொள்ளவும் செய்யும் போதுதான் – அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியை தன் தோல்வியாகவும் அவன் உணர்வான். இது உண்மையில் மனிதர்களை ஒன்றிணைத்து ஒரே சமூகமாக ஆக்கும் விசயம் ஆகும்.//”

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

போராட்டக் கல்வி - மூணாறு பயணம்

போராட்டம் எனும் இந்தச் சொல் மிகப் பழமையான சொல்லாக தோன்றுகிறது. ஆதியில் ஒரு செல் உயிரியாக இருந்து படிப்படியாக பரிணாமம் அடைந்து மனிதனாக உருவாகிட பல்வேறு போராட்டங்களை இந்த இனம் நிகழ்த்தியிருக்கிறது. மனித விலங்காக மாறினாலும் தம் பரிணாமத்தில் இடையில் பிரிந்து வெவ்வேறு உயிராக பரிணாமித்துப் போன பல விலங்குகளிடம் இருந்து தன்னையும் தன் இனத்தையும் காப்பற்றிக் கொள்ள தொடர்ந்தது போராட்டம். அதன் பிறகு மனித இனத்திற்குள்ளாகவே இனத்தை வகுத்து தம்மைத் தாமே போரிட்டு தம்மிடம் இருந்தே தம்மை காத்துக் கொள்ள போராடுகிற காலமும் வந்து சேர்ந்தது. அந்தப் போராட்டம் இன்றும் ஓயவில்லை. தான் வாழ்வதற்கு ஆதாரமாக, தம்மை, தம் இனத்தின் உயிரை பிடித்து வைத்திருக்கும் ஆதாரத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு மனித இனமும் தம் போராட்டத்தை கை கொண்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு பேராபத்து என்கிற போது அதுவரை அமைதியாக இருந்திருக்கிற மனம் போராட்ட குணமாக வெடித்து எழுகிறது.

புதன், 6 ஏப்ரல், 2016

சோலைமலை அடிவாரம்

          வீடுகளுக்குள் முடங்கி வாழ்வதற்கும் கூட சமுதாயத்திடம் இருந்து பல்வேறு பாடங்களை கற்க வேண்டியுள்ளது. ஆனால் சமுதாயத்திடம் இருந்து பாடம் கற்கத் துவங்கிவிட்டால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது முட்டாள்தனமாக அறியத் துவங்கும். விடுமுறைகளில் தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றியை அளுத்திக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருந்த என்னை வெளியில் இழுத்து வந்து போட்டு பயணங்களையும் புத்தகங்களையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தது பசுமைநடை.