“//மனிதர்கள் ஒருவரோடு
ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவான அம்சங்களை அடைகிறார்கள். அதாவது
சமூகமானது மனிதர்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாக இருக்கிறது.//
மனிதர்கள் சாதி மத
பேதமற்று பொது நிகழ்வுகளில் பங்குபெறுவதன் மூலமாக அவர்களை ஒரே சமூகமாக்க முடியும் என்கிற
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இந்த வார்த்தைகளை இந்த மாத பசுமைநடைக்கான பணிகளில் நான்
உணர்ந்தேன். பசுமைநடையின் கைபேசி எண் இந்த முறை என் வசம் இருந்தது. ஒரு வார காலத்திற்கு
முன்பிருந்தே, “இந்த (சூன் மாதம்) மாசம் நடை இல்லையா!?” என தொடர்ச்சியாக பசுமைநடை நண்பர்கள்
அழைத்து பேசத் துவங்கினர் . 03-07-2016 அன்று பசுமைநடை கீழடி நோக்கி செல்கிற குறுந்தகவல்
கிடைத்ததும் பசுமைநடை நண்பர்கள் தொடர்ச்சியான உறுதிப்படுத்தலையும், இந்த முறை வர இயலாமை
குறித்த வருத்தங்களையும் இந்த நடைக்கான வாழ்த்துகளையும் தொடர்ச்சியாக பதிவு செய்து
கொண்டிருந்தனர். பசுமைநடையின் அன்றைய காலையும், கூடுகை இடமான தெப்பக்குளம் வந்துவிட்டதை
உறுதி செய்து; கை கொடுத்து; புன்னகையோடு பயணத்திற்காக காத்திருந்தார்கள். பசுமைநடை,
வரலாறு, சூழலியல் சார்ந்து மட்டுமல்லாது மனிதர்களை ஒன்றிணைக்கும் மகத்தான பணியையும்
செய்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

இந்த மகிழ்ச்சி கொடுத்த உத்வேகத்தோடு வைகைக் கரை சாலையில் கீழடி நோக்கி பயணிக்கத் துவங்கினோம். பாண்டிய மன்னர்கள் மணலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த மணலூருக்கு அருகில் அமைந்துள்ள ‘கீழடி பள்ளிச்சந்தை’யில் மத்திய தொல்லியல்துறை அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கீழடி அகழாய்வு தளத்திற்கு பசுமைநடையின் இரண்டாவது பயணம் இது. முதல்கட்ட அகழாய்வில் 1500 பொருட்களை சேகரித்த தொல்லியல் துறை இரண்டாம் கட்ட ஆய்விற்கு அனுமதி வாங்கி தற்போதைய ஆய்வில் 3000 வரலாற்றுப் பொருட்களை சேகரித்துள்ளது. இந்த ஆய்வு செப்டம்பர் மாதம் முடிவடைவதையடுத்து, மூன்றாம் கட்ட அகழாய்விற்கும் அனுமதி பெற்றுள்ளார்கள்.
மனிதன் இயற்கையோடு
இயைந்த வாழ்வை வாழும் போதே ஒரு மகோன்னதமான வாழ்வியலை வாழ முடியும் என்கிற மார்க்ஸின்
இந்த வார்த்தைகளின் உண்மைத் தன்மையை இங்கு அறிய முடிகிறது. நதி ஒன்றின் கரையில் தலைநகரை
அமைத்து; அங்கேயே கிடைக்கிற மண் கொண்டு செங்கல் சுட்டு வீடும் வாய்க்காலும் அடுப்பும்
செய்து; மண்ணைக் குலைத்து வடிவங்களை கொடுத்து அவற்றை சுட்டுக் காயவைத்து அணிகலன்களாக
அலங்கரித்துக் கொண்டு; தண்ணீர் பிடித்து வைக்கும் பானையில் இருந்து கிணற்றின் உறை வரை,
சுடுமண் பொம்மைகள்என பெரும்பாலும் மண் பொருட்களாகவே பயன்படுத்தியுள்ளனர். மண் முதற்கொண்டு
இயற்கையிடம் இருந்து அந்நியப்பட்ட சமகாலச் சூழலில் மண்ணில் விழுந்த திண்பண்டங்களை எடுத்துத்
தின்பதற்கு கூட நம் மனம் கூசுகிறது.

காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுந்தர்காளி அவர்களது உரை, 2500 ஆண்டுகளுக்கு முன் புதைந்து போன மனிதர்கள் எழுந்து வந்து உரையாடிக் கொண்டிருக்கிற உணர்வை கொடுத்ததது. அம்மக்களின் வாழ்க்கை எப்படியான சூழலில் கட்டமைக்கப்பட்டு இருந்திருக்கிறது என்பதை கண்முன் நிறுத்திவிட்டார்.
ரவுலட், ஹரிட்டைன்
வகை ரோமானிய மண்பாண்டங்கள் இங்கு அநேகமாக கிடைத்துள்ளன. சங்க கால மாந்தர் ரோம் நகரோடு
வணிகத் தொடர்பில் இருந்துள்ளதற்கு சான்றுகள் இவை. ராமேசுவரம் அழகன்குளம் துறைமுகத்திற்கு
செல்லும் பெருவழியில் இந்த கீழடி அமைந்துள்ளதால் கடல்தாண்டிய தேசங்களுடனான உறவு இருந்துள்ளதை
அறிய முடிகிறது. வணிக உறவில், இங்கிருப்பவர்கள் அங்கும், அங்கிருப்பவர்கள் இங்கும்
வந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் யாரும் யாரையும் வந்தேறிகள் என சொல்லியிருக்க
வாய்ப்பில்லை.
சந்தன், முயன், சேந்தன்,
அதிதி என தமிழியில் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் மிக முக்கியமான ஆதாரமென தொல்லியல்துறை
ஆய்வாளர் வீரராகவன் கூறுகிறார். பொருட்களை விட எழுத்துக்களே இங்கும் எங்கும் வலிமையானவையாக
இருக்கின்றன. அதுபோன்ற வலிமையான எழுத்திற்கு சொந்தக்காரர் எழுத்தாளர் கோணங்கி அவர்கள்
இந்த பசுமைநடையில் எங்களோடு கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
மபெரும் வரலாற்று நிகழ்வாகவே
இந்த பசுமைநடை நிகழ்வு அமைந்திருந்தது. இன்னொரு 83 தலைமுறை கடந்து வரப் போகிற மனிதர்களுக்கு
நாம் என்ன அடையாளங்களை விட்டுவைக்கப் போகிறோம் என்கிற பெரிய கேள்வியோடு தான் அகழாய்வுத்
தளத்தில் இருந்து விடைபெற்று நகர்ந்தோம்.
//ஒரே மாதிரியான திருவிழாக்கள், அவற்றை இணையாகக்
கொண்டாடும் பல்வேறான சாதிகளை ஒன்றுபட்ட ஒரே சமூகமாக இணைத்துவிடுவதில்லை. அப்படி இணைக்கப்பட
வேண்டுமானால் அவர்கள் பொதுவான நடவடிக்கையில் பங்கு பெறுவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம்.//
//கூட்டு நடவடிக்கைகளில் தனிமனிதனை – பங்கு பெறவும்
பகிர்ந்து கொள்ளவும் செய்யும் போதுதான் – அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன்
வெற்றியாகவும், தோல்வியை தன் தோல்வியாகவும் அவன் உணர்வான். இது உண்மையில் மனிதர்களை
ஒன்றிணைத்து ஒரே சமூகமாக ஆக்கும் விசயம் ஆகும்.//”
இந்த மகிழ்ச்சி கொடுத்த உத்வேகத்தோடு வைகைக் கரை சாலையில் கீழடி நோக்கி பயணிக்கத் துவங்கினோம். பாண்டிய மன்னர்கள் மணலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த மணலூருக்கு அருகில் அமைந்துள்ள ‘கீழடி பள்ளிச்சந்தை’யில் மத்திய தொல்லியல்துறை அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கீழடி அகழாய்வு தளத்திற்கு பசுமைநடையின் இரண்டாவது பயணம் இது. முதல்கட்ட அகழாய்வில் 1500 பொருட்களை சேகரித்த தொல்லியல் துறை இரண்டாம் கட்ட ஆய்விற்கு அனுமதி வாங்கி தற்போதைய ஆய்வில் 3000 வரலாற்றுப் பொருட்களை சேகரித்துள்ளது. இந்த ஆய்வு செப்டம்பர் மாதம் முடிவடைவதையடுத்து, மூன்றாம் கட்ட அகழாய்விற்கும் அனுமதி பெற்றுள்ளார்கள்.
இரண்டாயிரத்து ஐந்நூறு
ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நதி நாகரீகம் எங்களின் கண்முன்னே விரிந்து நின்றது. கால
இயந்திரத்தின் மூலமாக சங்க காலத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கிற உணர்வு எழுந்தது. ஒரு
தலைமுறைக்கு சராசரியாக 30 ஆண்டுகள் சொல்லப்படுகிறது. அவ்வாறெனின் தோராயமாக 83 தலைமுறை
மனிதர்களுக்கு காணக்கிடைக்காத ஒரு பெரு நகரம் இந்த தலைமுறை மனிதர்களில் ஒருவனாக நான் காண வாய்ப்பு
அமைந்ததை எனது வாழ்வின் மாபெரும் நிகழ்வாகவே கருதுகிறேன்.
“மனிதன் இயற்கையினால்
வாழ்கிறான். அதாவது இயற்கைதான் அவனது உடல். மேலும் அவன் சாகாமல் இருக்க வேண்டுமென்றால்
அவற்றுடன் தொடர்ச்சியாக உரையாடலை மேற்கொண்டு வரவேண்டும். மனிதனின் பௌதிக/புற மற்றும்
அக வாழ்வானது இயற்கையுடன் இணைந்தது என்பதை எளிதாகச் சொல்வதென்றால், இயற்கை அதனுடனே
இணைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி.”
காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுந்தர்காளி அவர்களது உரை, 2500 ஆண்டுகளுக்கு முன் புதைந்து போன மனிதர்கள் எழுந்து வந்து உரையாடிக் கொண்டிருக்கிற உணர்வை கொடுத்ததது. அம்மக்களின் வாழ்க்கை எப்படியான சூழலில் கட்டமைக்கப்பட்டு இருந்திருக்கிறது என்பதை கண்முன் நிறுத்திவிட்டார்.
தனியாக அகழாய்வுப்
பள்ளங்களை கடந்து செல்லும் போது அவை ஏதோ ஒரு கட்டிடமாகவும் வீட்டின் தரையாகவும் மட்டுமே
காட்சிப்பட்டது. வரலாற்றுத்துறை பேராசிரியர் கண்ணன் அவர்கள் அவை ஒவ்வொன்றையும் விளக்கும்
போது அவற்றின் முக்கியத்துவமும் அதனுள் புதைந்து கிடக்கிற அறிவியல், வரலாறு, பொறியியல்
தரவுகளை பதிவு செய்ய இயன்றது. கழிவு நீர்க் கால்வாயின் அகலத்தை ஒப்பிடுகையில் இந்த
காலத்து அரசாங்கக் கால்வாய்கள் உடைந்து போவதும் குறுகலாக அமைக்கப்பட்டு அடைத்துக் கொள்வதும்
என தொடர்கிறது. சுடு மண் கொண்டு செய்யப்பட்ட கழிவுநீர் குழாய்கள் கழிவுகளை உடனுக்குடன்
வெளியேற்றி சுகாதாரமான வாழ்வியலை இம்மண்ணின் மக்கள் வாழ்ந்திருப்பதை உணர முடிகிறது.
அன்பும் நன்றியும்
-பாடுவாசி
08-07-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக