திங்கள், 16 நவம்பர், 2015

பாபு எனும் கடலூர் நண்பன்

26 ஆகஸ்ட் 2012 அன்று மாடக்குளம் கண்மயில் பசுமைநடை நிகழ்வு நடைபெற்றது. அன்று தான் முதன் முதலாக பாபு அறிமுகம். நன்றாக ஞாபகம் உள்ளது “வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாரதியின் வரிகளை சுமந்த கை சட்டையை அன்று அணிந்திருந்தார். சிறு புன்னகை சில வார்த்தைகளுடன் அன்றைய நட்பு துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு பசுமைநடைக்கும் மாதாமாதம் சென்னையில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். நட்பின் ஆழம் அதிகாமகிக் கொண்டிருந்தது. “வாங்க.. போங்க..” என்றிருந்த நட்பு பெயர் சொல்லி அழைத்து பேசும் அளவிற்கு பரிணாமம் அடைந்தது.

“ஏன் பாபு மாசம் மாசம் பசுமைநடை வந்துடுறீங்களே.. உங்க அம்மா அப்பா வீட்டுக்கு வரச் சொல்லி திட்டமாட்டாங்களா??” எனக் கேட்டால்.

“அய்யோ.. ரகு!! நான் எந்த ஞாயிற்று கிழமையும் வீட்டுக்கு போமாட்டேன்யா.. லீவு நாள்ல எங்கயாவது புது புது எடத்துக்கு பஸ் ஏறி போய்டுவேன். எப்பனாலும் தான்  கடலூருக்கு போவேன்.” என்பார் இயல்பாக.

முகநூலில் கூட வழிப்போக்கன் என்று தான் துணைப் பெயர் வைத்திருப்பார். அந்த துணைப் பெயருக்கு ஏற்றார்போல அவர் பணி புரிந்த நிறுவனத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு அவரை அனுப்பிவிட்டனர். ஒரு வருட காலம் அலைபேசியிலும் முகநூலிலும் தொடர்ந்து பசுமைநடையின் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு நடை நிகழ்ந்த பின்னும்,

புதன், 11 நவம்பர், 2015

அப்பா

அப்பா. இந்த சொல்லை உச்சரிக்கும் போதே பாசமான உணர்வினை அனுபவிப்பதை உணர்கிறேன். வாழும் கணம் வரை இந்த சொல் அந்த உணர்வினை கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். என் அப்பா எனக்காக இதை செய்தார், அதை செய்தார், இங்கே கூட்டிச் சென்றார், அங்கே கூட்டிச் சென்றார், இதை வாங்கிக் கொடுத்தார், அதை வாங்கிக் கொடுத்தார் என எதையும் என்னால் சொல்ல இயலாது. ஏனென்றால் இதில் எதையும் அவர் செய்ததில்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு வாய்க்கவில்லை. எனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது இரவில் பணி முடித்து வரும் போது காரச் சேவு, பக்கோடா ஏதாவது வாங்கிவருவார். பாதி உறக்கத்தில் எழுந்து அமர்ந்து அவற்றை தின்று விட்டு காலையில் எழுந்து “அப்பா திங்க என்ன வாங்கீட்டு வந்தீங்க?” என கேட்பேன். அவர் எனக்காக வாங்கிக் கொடுத்தது என்று என் நினைவில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் இதை சொல்லலாம். கூட்டி சென்ற இடம் என்றால், முடி வெட்டுவதற்கு ஊத்துக்கு (ஊற்று) கூட்டிச் சென்று அங்கு குளித்துவிட்டு வருவோம். குண்டாற்றின் கரையில் சாதிக்காக ஏற்படுத்தப்பட்ட குளிக்கும் இடம் அது.

ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னை தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதோடு முடிந்துவிட்டது அவரது நடமாட்டம். எனக்கு நன்றாக நினைவுள்ளது, அவருக்கு சாதாரண காய்ச்சல் தான். அப்பாவினுடைய அம்மா இருக்கும் வரை அவருக்கு கைவைத்தியம் தான் என சொல்வார்கள். என் அம்மா சற்று அதீத அக்கறையுடன் ஆங்கில மருந்துக்கு மாற்றினார் அப்பாவை. திருமங்கலத்தின் அப்போதைய மிகப் பிரபலமான மருத்துவர் நடராச ரத்தினம். அவரிடன் ஆலோசனையின் பெயரில் அதிக வீரியமான (Heavy Dosh) மருந்தை உட்கொண்டார் அப்பா. அதன் விளைவு,

சனி, 24 அக்டோபர், 2015

சிதைவின் வாசலில் வரலாறு - முத்துப்பட்டி

மலைகள் எனது அகராதியில் பிரம்மிப்பு என பொருள்படுகின்றன. பிறந்தது முதல் இவற்றினூடே பயணித்துக் கொண்டிருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். பேருந்தினில் சன்னல் வழியாக என்னுடனே பயணிக்கும் நிலவையும் மேகங்களையும் கவனிக்கத் துவங்கியது போலவே சில தொலைவு உடன் நகரும் இம் மலைகளையும் கண்டு ரசிக்கத் துவங்கினேன். உயர்ந்த மலைகளில் யாரிருப்பர்? என்ன இருக்கும்? மலைகளின் பின்புறம் எப்படி இருக்கும்? மலைகளின் மீது நடப்பது எப்படியான உணர்வைத் தரும்!? என ஆயிரம் கேள்விகள் எதிர்பார்ப்புகள் பால்யம் முதல் துரத்திக் கொண்டு வந்தன. துரத்திவந்த கேள்விகள் என்னை விட்டுச் சென்ற இடம் பசுமைநடை. பால்யத்தின் கேள்விகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பசுமைநடை மூலம் விடை கிடைத்தது. மலைகளுக்கு பின் உள்ள அரசியல் வியபாரம் வரைக்கும் கூட தேடாத கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.

வியாழன், 22 அக்டோபர், 2015

நஞ்சுண்டதெந்தன் கனவு

சூன்-2015ல் கூழாங்கற்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலக்கிய கூட்டத்தின் மூலம் தான் “நஞ்சுண்ட காடு” மற்றும் “விடமேறிய கனவு” இவ்விரு நூல்களும் எனக்கு அறிமுகம். இந்நூற்கள் குறித்து பேச்சாளர்கள் பேசிய போது மனதுள் ஏற்பட்ட தாக்கம் இவற்றை வாங்கிட உடல் கூசியது. பெரும் மன உலைச்சலோடு வீடு திரும்பிய தினம் அது. 2008-2009 தினங்களில் அனுபவித்த உணர்வினை ஒத்திருந்தது அந்த உணர்வு. ஏதோ துணிவு வர ஆகஸ்ட்-2015 மதுரை புத்தகத் திருவிழாவில் இவ்விரு நூற்களையும் தேடி வாங்கி, அதனை இப்போது வாசிக்கும் மனப் பக்குவம் வாய்த்தது.


2009-ல் ஈழ மண்ணில் நிகழ்ந்த போரின் தாக்கத்தினை இரண்டு நூலாக பதிவு செய்துள்ளார் அண்ணன் குணா கவியழகன். போருக்கு முந்தைய சூழலில் போராளிகளது வாழ்வியல், போருக்கு பிந்தைய சூழலில் அவர்களது அவமானகரமான வலிகள் என நகர்கிறது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

பழங்குடிகள் பாதுகாப்பில் வரலாறு - கோத்தர்மலை-2

          தாயின் நீர்க்குடத்துக்குள் குழந்தை மிதப்பதைப் போல வள்ளுவர் நகர் சமுதாயக்கூடத்திற்குள் கிடந்தோம். சுற்றிலும் பனி. இருண்ட மலைகளுக்கு இடையில் பூச்சிகளும் தவளைகளும் சோழி குழுக்கிக் கொள்ளும் சப்தம் சுற்றிலும் இருளுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தது. சற்று விடிய பறவைகள் தங்களது தாய் மொழியில் பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் திரியத் துவங்கின. இந்த பனியில் கம்களிகளைச் சுற்றாமல் இவைகளால் எப்படி சுற்றித்திரிய இயல்கிறதோ!!



         படவியை கையில் எடுத்துக் கொண்டு சூரிய உதயத்தை எடுக்க முயற்சித்து இளஞ்சிவப்பு மேகங்களை மட்டுமே படமாக்க இயன்றது. செடி கொடிகள் மீதும் பனி சிந்திய ஈரம். வாகனக் கண்ணாடிகளில் படிந்திருந்த பனிப்படிமங்களை கண்டதும் பால்ய வயது நினைவு வர, எனது பெயரை எழுதிப் பார்த்தேன். யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அழித்தேன். அது கண்ணீராக வடிந்தது.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

மலையகத் தமிழர்களின் பச்சை ரத்தம் - கோத்தகிரி-1

          புத்தகங்களும் பயணங்களும் வாழ்வதற்கான காரணங்களை அர்த்தப்படுத்துகின்றன. இவை அமையாதவர்கள் இயந்திர யுகத்தில் சிக்கித் திணறுவதாகவே தோன்றுகிறது. அதே போன்ற கால இயந்திர சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருந்த என்னை மீட்டெடுத்தது “பசுமைநடை” என்பதை நான் எங்கும் பதிவு செய்வேன். பசுமைநடை எனும் கைகாட்டி பலகை எனது வாழ்க்கை பயணத்தின் திசையை திருப்பியிராவிட்டால், இன்று அரவிந்தன் என்கிற தோழமையும் அத்தோழமையின் மூலமாக “ஊர்க்குருவிகள்” எனும் தோழர் வட்டத்தோடு இந்த கோத்தகிரி பயணமும் வாய்த்திருக்காது.


          
          திருமங்கலத்தின் எனது வீட்டு வாசலில் இருந்து துவங்கியது பயணம். பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வந்த ஒருவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டிருந்தார் காவலர் ஒருவர். இன்னும் விடியவில்லை. பொழுதும் தான்.

சனி, 12 செப்டம்பர், 2015

கடலை மிட்டாயும் ஹார்லிக்சும்


              பள்ளியில் படிக்கும் போது அரையாண்டு காலாண்டு முழு ஆண்டு தேர்வு விடுமுறை தினங்கள் எனது பெரிய மாமா வீட்டிலேயே கழிந்தது. அவரது வீட்டுக்கு அருகில் கடலை மிட்டாய் தயார் செய்யும் சிறு வீடு இருந்தது. ஓட்டு வீட்டுக்குள் வைத்து மிகச் சுவையான கடலை மிட்டாய்களை தயாரித்துக் கொண்டு இருப்பார்கள்.

"ஓட்டு வீட்டுல தான செய்றாங்க, பின்ன ஏன் குடிசைத் தொழில்னு போட்டுருக்காங்க!!"

என அந்த மிட்டாய் மேல் இருக்கும் பெயர் காகிதத்தை பார்த்து மாமாவிடம் கேட்பேன். அவர் பதில் சொன்னதாக நினைவில்லை.